வருசப்ரவேச ஜாகதம் கணிப்பது எப்படி என்ற கேள்விகள் நமது மின்னஞ்சலுக்கு அடிக்கடி வருகின்றன. சிலர் ஜன்ம நட்சத்திரம் வரும் நாளை எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டிருக்கின்றார்கள். ஜன்ம நட்சத்திரத்துக்கும், வருசப்ரவேச ஜாதகக் கணிப்புக்கும் சம்பந்தமே இல்லை. பிறந்த நாளை நட்சத்திரப்படியும், இறந்த நாளை திதிப்படியும் ஏன் எடுத்துக்கொள்கின்றோம் என்ற கேள்வியைக் கேட்பவர்கள் யாருமில்லை. நாம் அடிக்கடி எழுதுவதுபோல் ஞானத்தைத் தேடும் கேள்விகளுக்கு இப்பொழுது இந்தியாவில் பஞ்சம்தான்.

sample horoscope

மேலேயுள்ள அட்டவணையில் நான்கு விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முதலில் வருடம், பின்னர் கிழமை, பின்னர் மணி, கடைசியாக நிமிடம் என்ற வரிசையில் அவை உள்ளன. ஒருவரது 20-வது வயதுக்கான வருசப்ரவேச ஜாதகம் கணிக்க வேண்டுமெனில், முடிந்து போன 19 வயதுக்கான கிழமை, மணி, நிமிடம் இவற்றை அறிய வேண்டும். மேலேயுள்ள அட்டவணையில் 19 இல்லை. ஆனால் 10-வது வருடமும், 9-வது வருடமும் உள்ளன. அவற்றுக்கான கிழமை, மணி, நிமிடம் இவற்றைக் கூட்டினால் 19-வது வயதுக்கான கிழமை, மணி, நிமிடம் கிடைக்கும்.

 10 வருடத்துக்கு 5 13 31.6
  9 வருடத்துக்கு  4 07 22.5
        ----------------------
          9 20 54.1
        ----------------------

கிழமைக்கான இடத்தில் 9 வருவதால், அதில் 7-ஐக்கழித்து 2 என்று எடுத்துக்கொள்ள வேண்டும். 7ம், 7-க்கு உட்பட்டும், இருந்தால் அப்படியே வைத்துக்கொள்ளலாம். 15 வருடத்துக்குரிய கிழமை, மணி, நிமிடம் ஆகியவற்றை 4 வருடத்துக்குரிய கிழமை, மணி, நிமிடம் ஆகியவற்றுடன் கூட்டினாலும் 19-வது வருடத்துக்குரிய கிழமை, மணி, நிமிடம் கிடைக்கும்.

 15 வருடத்துக்கு 4 20 17.4
  4 வருடத்துக்கு  5 00 36.6
        -----------------------
           9 20 54.0
        -----------------------

நிமிடத்தில் மட்டும் தசமத்தானத்தில் வித்தியாசம் வருகிறது. இதைப் பொருட்படுத்த வேண்டாம். இப்பொழுது எந்த வயதுக்குமான கிழமை, மணி, நிமிடம் இவற்றைக் கண்டுபிடிக்க நம்மால் முடியும். இப்பொழுது ஒரு உதாரணம் பார்ப்போம்.

ஒருவர் 1.3.1996 வெள்ளிக்கிழமை காலை மணி 10.00க்குப் பிறந்தார் என்று வைத்துக்கொள்ளுங்கள் எப்பொழுதுமே ஞாயிற்றுக்கிழமையை 1 என்றும், திங்கள்கிழமையை 2 என்றும், இதே வரிசைப்படி சனியை 7 என்றும் எடுத்துக்கொள்ள வேண்டும். இங்கே 1.3.1996 வெள்ளி என்பதால் அந்த ஜாதகர் பிறந்ததை இவ்வாறு எழுதலாம்.

6 10 00 . இப்போது வரும் மார்ச் 2019-ல் இந்த ஜாதகருக்கு 23 வயது முடிந்து 24 பிறக்கும் என்பதால் முடிந்துபோன 23 வயதுக்கான கிழமை, மணி, நிமிடம் இவற்றை மேலேயுள்ள அட்டவணையிலிருந்து கணக்கிட வேண்டும்.

 20 வயதுக்கு 4   3 3.2
  3 வயதுக்கு  3 18 27.5
      ----------------------
          7 21 30.7
      ----------------------

இவ்வாறு கிடைக்கப்பெற்ற  7 21 30.7 உடன்
பிறந்த தேதிக்கான       6 10 00.0 ஐச் சேர்த்தால்
              ----------------------
                14 07 30.7 கிடைக்கும்.
              ----------------------

14-ல் 7-ஐக் கழித்தால் 7 07 30.7. எனவே இவரது 24-வது வயது 2019 மார்ச் மாதம் சனிக்கிழமை காலை மணி 7 நிமிடம் 30.7-க்குப் பிறக்கிறது என்று அர்த்தம். இவரது பிறந்த நாளை (மார்ச் 1) ஒட்டிய சனிக்கிழமை 2.3.2019-ல் வருகின்றது. எனவே 1.3.1996 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்குப் பிறந்த ஒருவரது 24-வது வயது 2.3.2019 சனிக்கிழமை காலை மணி 7 நிமிடம் 30.7-க்குப் பிறக்கின்றது என்று கண்டு கொள்ள வேண்டும். 2.3.2019 காலை மணி 7 நிமிடம் 30.7-க்குரிய கிரக நிலைகளும், அப்போது உதயமாகும் லக்னமுமே அவரது 24-வது வருசப்ரவேச ஜாதகமாகும்.

இந்தக் கணக்கில் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்:

  1.  பிறந்தநேரம், கிழமை முதலியவை ரெயில்வே கடிகார முறைப்படி எழுதப்பட வேண்டும்.
  2.  கிழமைகளின் கூடுதல் 7-க்கு மேற்பட்டால் 7-ஐக் கழித்து வரும் எண்ணுக்கான நாளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  3.  கிழமைகளின் வரிசை எண் ஞாயிறில் ஆரம்பித்துச் சனியில் முடியும்.
  4.  கிழமைதான் பிறந்த நாளைத் தீர்மானிக்கிறதே தவிர பிறந்த தேதியல்ல. (பிறந்த தேதிக்கு முந்திய அல்லது பிந்திய தேதிகள்கூட வருசப்ரவேச நாட்களாக அமையலாம்.)
  5.  முடிந்துபோன வயதுக்கான கிழமை, மணி, நிமிடம் இவற்றையே எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

 

வாசகர்கள் இந்த அட்டவணையையும், உதாரணங்களையும் பயன்படுத்தித் தங்களது வருசப்ரவேச ஜாதகத்தைக் கணித்துக்கொள்ளலாம். சோதிடம் பயில விரும்புபவர்கள் தரமான பஞ்சாங்கம் ஒன்றை வைத்துக்கொள்வது அவசியம். கிரகஸ்புடங்களைத் தருவதுதான் முழுமையான பஞ்சாங்கம்;. பாதசாரத்தைத் தருவது முழுமையான பஞ்சாங்கம் அல்ல.

 

This Week’s Quote:

A great age of literature is perhaps always a great age of translations.

-  Ezra Pound

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 204 guests and no members online