ஆயுளைக் கணக்கிடும் முறைகளைக் கற்றுக்கொள்ள ஒரு உதாரண ஜாதகம் வேண்டுமே? தேசத் தந்தை மகாத்மா காந்தியின் ஜாதகத்தை வைத்து இந்தக் கணக்குகளைக் கற்றுக்கொள்வோம்.

table

 

sample horoscope

sample horosope

 

முதலில் ஒவ்வொரு கிரகத்தின் ஆயுட்கலைகள் எவ்வளவு என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு ஒரு கிரகத்தின் உச்ச பாகையிலிருந்து அந்தக் கிரகத்தின் ஸ்புடத்தைக் கழிக்க வேண்டும். கழித்து மீதம் வரும் இராசி பாகை கலை 6 ராசிக்கு மேற்பட்டு இருப்பின் அப்படியே அதைக் கலைகளாக்கிக் கொள்ள வேண்டும். 6 ராசிக்கு உட்பட்டு இருப்பின், இந்த மீதத்தைப் பன்னிரண்டு ராசிகளில் கழித்து மீதம் வருவதைக் கலைகளாக்கிக் கொள்ள வேண்டும். இதுவே அக்கிரகத்தின் ஆயுட்கலைகளாகும்.    
சூரியனின் ஆயுட்கலையைக் கண்டுபிடிக்க சூரியனின் உச்ச பாகை  0, இராசி 10, பாகை 0 கலைகளில் சூரிய ஸ்புடமான 5 ராசி, 16 பாகை, 52 கலைகளைக் கழிக்க

 

table

மீதம் வருவது 6 இராசிக்கு மேற்பட்டு இருப்பதால் 6, 23, 08-ஐ கலைகளாக்க 12188 வரும். இதுவே சூர்யனின் ஆயுட்கலைகளாகும்.


செவ்வாயின் ஆயுட்கலைகளைக் கண்டுபிடிக்க செவ்வாயின் உச்ச பாகை 9, இராசி 28, பாகை 0 கலைகளில் செவ்வாய் ஸ்புடமான 6 இராசி, 26 பாகை, 21 கலைகளைக் கழிக்க

 

table

மீதம் வருவது 6 இராசிக்கு உட்பட்டு இருப்பதால் இதை 12 இராசிகளில் கழிக்க

 

table

கிடைக்கும். இதைக் கலைகளாக்க 16101 வரும். இதுவே செவ்வாயின் ஆயுட்கலைகளாகும். (உச்ச பாகையிலிருந்து கிரக ஸ்புடத்தைக் கழிக்கும் மீதம் 6 இராசிக்கு உட்பட்டிருப்பின் என்ன செய்ய வேண்டும் என்பதற்கும் மீதம் 6 இராசிக்கு மேலிருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கும் செவ்வாய், சூரியன் உதாரணங்களாகக் கொடுக்கப்பட்டன) இப்படியே மற்ற ஐந்து கிரகங்களுக்கும் ஆயுட்கலைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அவ்வாறு கிடைக்கப் பெற்றவைகளைத் தனியே எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.

 

table

 

சத்ரு க்ஷேத்ரஹரணம்

அடுத்து ராசிச் சக்கரத்தில் எந்த எந்தக் கிரகங்கள் சத்ரு வீட்டில் இருக்கின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். இங்கே சனி மட்டுமே சத்ரு வீட்டில் இருக்கின்றது. அது வக்ரமாக இல்லை. எனவே சனியின் ஆயுட்கலைகளில் 1/3 பங்கு குறைக்க வேண்டும். 19781ஐ 3ஆல் வகுக்கக் கிடைப்பது 6593 2/3 . எனவே 19781ல் 6594-ஐக் கழிக்கக் கிடைப்பது 13187. இதுதான் சனியின் உண்மையான ஆயுட்கலைகள்.

சக்கரபாதஹரணம்

வியாழன் ஏழில் இருப்பதால், சுபராதலால், வியாழனின் ஆயுட்கலைகளில் 1/12 பங்கும், சந்திரன் பத்தில் இருப்பதால், சுபராதலால் 1/6 பங்கும், சூர்யன் 12ல் இருப்பதால், பாபராதலால் முழு ஆயுட்கலைகளையும் குறைக்க வேண்டும். ஆனால் இந்த ஏழு, பத்து, பன்னிரண்டு என்ற இடங்களை லக்ன ஸ்புடமான 6 இராசி, 2 பாகை, 0 கலைகளிலிருந்து கணக்கிட வேண்டும். குரு மேஷத்தில் 2 பாகை, 0 கலைகளில் இருந்தால் மட்டுமே அது ஏழில் இருப்பதாக அர்த்தம். ஆனால் குரு 28 பாகை, 8 கலைகளில் இருப்பதால் கிட்டத்தட்ட எட்டில் இருப்பதாகத்தான் அர்த்தம். இதைக் கணக்கிடும் முறை ஸ்ரீபதி பத்ததி என்னும் நூலின் ஐந்தாவது அத்தியாயத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படி இந்த உதாரண ஜாதகத்தில் வியாழனுக்கு 1714 கலைகளையும், சந்திரனுக்கு 3858 கலைகளையும், சூர்யனுக்கு 6040 கலைகளையும் கழிக்க வேண்டும். இவைகளையெல்லாம் செய்தபிறகு கிடைக்கும் ஆயுட்கலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

table

ஒவ்வொரு கிரகத்தின் ஆயுட்கலையையும் அக்கிரகத்துக்குச் சொல்லப்பட்ட வருஷங்களால் பெருக்கி 21600 ஆல் வகுக்கக் கிடைப்பதே அக்கிரகம் கொடுக்கும் ஆயுளாகும்.

 

table

கிரகங்களைப் போலவே லக்னமும் சில வருஷங்களைக் கொடுக்கும். லக்னாயுர்த்தாயம் என்று சொல்லப்படும் இந்தக் கணக்கில் பல்வேறு அபிப்ராய பேதங்கள் உள்ளன. ஆனால் லக்னம் முதல் அம்சமாக இருப்பதால் லக்னஸ்புடம் 6 இராசி, 2 பாகை, 0 கலை கொடுக்கும் ஆயுள் 0 வருஷம் 7 மாதம் 6 நாட்கள். இதை மேற்கண்ட வருடங்களுடன் கூட்ட

 

table

ஆக எல்லாக் கிரகங்களும் லக்னமும் சேர்ந்து கொடுக்கும் ஆயுள் 78 வருஷம் 3 மாதங்கள் 6 நாட்கள். இதை 2-10-1869 உடன் சேர்க்கக் கிடைப்பது 08-01-1948. ஆனால் காந்தியடிகள் மறைந்த நாள் 30.01.1948. இந்த ஆயுர்த்தாயக் கணக்குப்படி வித்தியாசம் 22 நாட்கள் மட்டுமே.


சில விளக்கங்கள்

மிக எளிதாகத் தோன்றும் இக்கணக்குகள் சிக்கலானவை. இதே 02.10.1869ல் மகரலக்னத்தில் ஒருவர் பிறந்தார் என்று வைத்துக்கொண்டால் அவரது ஜாதகத்தில் பத்தாமிடத்தில் புதன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்கள் இருக்கும். பத்தாமிடத்தில் செவ்வாய் பாபியாகவும் புதன், சுக்ரன் சுபராகவும் இருக்கின்றனர். சக்கரபாதஹாணம் ஒரு கிரகத்துக்கு மட்டுமே செய்ய வேண்டும் என்று சில நூல்களும் மூன்று கிரகத்துக்கும் செய்ய வேண்டும் என்று சில நூல்களும் சொல்கின்றன. அதேபோலத் தேய்பிறைச் சந்திரனைச் சுபராகக் கருதக் கூடாது என்றும், பாவருடன் சேர்ந்த புதனும் பாபியாவதால் சக்கரபாதஹரணம் பாவருக்குச் செய்தல் போலவே செய்ய வேண்டும் என்றும் சில நூல்கள் சொல்கின்றன. நூற்றுக்கு மேற்பட்ட ஜாதகங்களுக்கு இவ்வாறு ஆயுர்த்தாயம் செய்து பார்த்த எனக்குச் சரியான விடை எப்போதுமே கிடைக்கவில்லை. இரண்டு மூன்று வருட வித்தியாசங்கள் எப்போதுமே வந்திருக்கின்றன. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. நாம் கிரகஸ்புடங்களையும், லக்னஸ்புடத்தையும், ராசி, பாகை, கலை அளவுக்கே கணக்கிடுகின்றோம். விகலை அளவுக்குத் துல்லியமாகக் கணக்கிடுவதில்லை. அதே போல் லக்னஸ்புடத்தைச் சமீபத்திலுள்ள பெரிய நகரத்தின் ரேகாம்சம், அட்சாம்சம் (longitude, latitude) மூலமே கணக்கிடுகின்றோம். சிற்றூரில் பிறந்த ஒருவரின் லக்னஸ்புடம் எப்போதுமே சரியாக அமைவதில்லை.


ஆனால் பெரிய அளவில் வித்தியாசம் வரக்கூடாது என்பதை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்படி வித்தியாசங்கள் வரும் என்பதைத் தெரிந்த முந்தைய சோதிட வல்லுனர்கள் இந்த வித்தியாசங்களுக்குச் சொல்லும் சமாதானங்கள் வேடிக்கையானவை. தர்மநெறிப்படி வாழ்ந்து, மேலோர்களுக்கு மரியாதை செய்து, குறைவாகவே உண்டு, புலனடக்கத்துடன் வாழ்பவனுக்குக் கணித முறைப்படியான ஆயுளைவிட அதிகமான வருடங்கள் கிடைக்கும் என்றும், தர்மநெறியை விட்டு விலகி, மேலோர்களை மதியாமல், புலனடக்கமின்றி, அளவுக்கு அதிகமாக உண்டு வாழ்பவனுக்குக் கணித முறைப்படியான ஆயுளைவிடக் குறைவான ஆயுளே கிடைக்கும் என்றும் அவர்கள் சொல்கின்றார்கள். மேலும் கணிதமுறைப்படி கிடைக்கும் வருடங்களை ஒட்டிக் கோசார ரீதியாகவும் கிரகங்கள் மோசமான இடத்துக்கு வந்தால் அப்போது ஆயுளுக்குப் பங்கம் வரும் என்று நிச்சயித்துக் கொள்ள வேண்டும். மேலும் இவ்வாறு கிடைக்கப் பெற்ற வருஷங்களே அந்தஅந்தக் கிரகங்களின் தசாவருஷங்களாகும்.
காந்திக்கு முதலில் லக்ன தசை, பின்னர் லக்ன கேந்திரத்தில் உள்ள புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சந்திரன் இவர்களில் எவர் பலமாக உள்ளாரோ அவரது தசை. இவ்வாறு நிர்ணயம் செய்வதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. சுக்கிரனும் சொந்த வீட்டில். சந்திரனும் சொந்த வீட்டில். வியாழன் வக்ரமாகப் பலமான கேந்திரத்தில். இந்த மூவரில் யாருடைய தசை முதலில் என்பதைக் கணிப்பது கடினம். கிரகங்களின் தசா வரிசை மாறிப் போனால் பலன்களைச் சொல்வதும் சிக்கலாகிப் போய்விடும். எனவேதான் அதிகமான புத்திநுட்பத்தையும் கணித அறிவையும் வேண்டுகின்ற இக்கணக்குகளை விட்டு விட்டு நட்சத்திர தசைகளுக்கு மாறிப் போனார்கள் சோதிடர்கள். போகட்டும்.
கோளத்திரிகோணமிதி என்னும் Spherical Trigonometry, Calculus போன்ற கணக்குகளில் மிக்கத் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் யாராவது இக்கணக்குகளைப் படிக்க முன்வந்தால் அவர்களுக்கு இக்கணிதத்தைப் பயிற்றுவித்து எளிதான கணித சூத்திரங்களில் இக்கணக்குகளை மாற்றிக்கொடுக்க எனக்கு ஆசை.

சமீபத்தில் ஒரு வாசகர் சோதிடம் பயில்வோருக்கு எந்த மாதிரி ஜாதகம் இருக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். சோதிடர்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணங்கள் சொல்லப்பட்டுள்ளனவே தவிர சோதிடர்களாவதற்கு ஜாதகம் இப்படியிருக்க வேண்டுமென்று எங்கும் குறிப்புக்கள் இல்லை. ஆனால் விருச்சிகம், மீனம் போன்ற ராசிகளில் சூர்யன் அல்லது சந்திரன் இருப்பவர்கள் லக்னாதிபதி அல்லது சந்திரன் எட்டில் இருப்பவர்கள் 4, 8, 12 போன்ற இடங்களில் முக்கிய கிரகங்கள் இருப்பவர்கள் நல்ல சோதிடர்களாக ஆவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. விருச்சிகம், மீனம் போன்ற இராசிகளில் சூர்யன், சந்திரன் போன்ற கிரகங்கள் இருப்பவர்கள் ஒளிந்து கிடக்கும் விஞ்ஞான உண்மைகளை வெளிக்கொணர்வதில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பர். உலகம் கண்ட அறிவியலாளர்களில் முதல் இடத்தில் இருக்கும் ஐன்ஸ்டீன் ஜாதகத்தில் சூர்யன், புதன், சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் மீனராசியிலும், சந்திரன் விருச்சிக ராசியிலும் இருக்கின்றன. காலபுருஷனின் நான்காவது, எட்டாவது, பன்னிரண்டாவது ராசிகளாக இருக்கும் கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகள் தத்துவவாதிகளையும், விஞ்ஞானிகளையும், ஞானிகளையும் உருவாக்குவதில் பெரும் பங்காற்றுகின்றன.

எனது முடிவுகளின்படி தசா விவரம் (மகாத்மா ஜாதகத்திற்கு)

 

table

 

                             



 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். 

 


Kanyasasi Newsletter

List of Articles

Who's Online

We have 60 guests and no members online