நீரில் கண்டம், நெருப்பினில் கண்டம் என்பதெல்லாம் சோதிடர்களிடையே புழங்கும் சொற்கள். தண்ணீரில் கண்டம் என்பது சில திரைப்படங்களில் நகைச்சுவைக் காட்சியாகவே ஆக்கப்பட்டுள்ளது. வராகமிகிரர் தனது பிருஹஜ் ஜாதகத்தின் 25-வது அத்தியாயத்தில், இரண்டாவது சுலோகத்தின் கடைசிப் பகுதியில் ஒருவன் நீரில் மூழ்கி இறப்பதற்கான யோகத்தைச் சொல்லுகின்றார். ‘சூரியன், சந்திரன் இவர்கள் ஜன்மலக்னமான உபயராசியில் இருப்பார்களேயானால் அப்பொழுது பிறந்தவன் ஜலத்தில் மூழ்கியவனாய் மரணத்தையடைவான்’ என்பது கடலங்குடி நடேச சாஸ்திரிகளின் மொழி பெயர்ப்பு. எமது தந்தையாரின் ஜாதகத் தொகுப்பில் இந்த யோகத்தில் பிறந்து நீரில் மூழ்கி மரணமானவர்களின் ஜாதகங்கள் இரண்டு கிடைத்தன. அவற்றை இங்கு தருகின்றோம்.








முதலாவது ஜாதகர் 1971 டிசம்பர் 3-வது வாரத்திலும், இரண்டாவது ஜாதகியான சிறுமி 20.04.1974 தேதியிலும் தாமிரபரணி ஆற்றின் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தனர். இருவருமே உபய லக்னங்களில் பிறந்தவர்கள். இருவரது ஜாதகங்களிலும் சூரியனும், சந்திரனும் உபய ராசிகளில் உள்ளன.
இதே யோகத்தில் பிறந்து நீரில் மூழ்கி மரணமடையாமல், நோயால் மாண்டவர்களின் ஜாதகங்களும் எமது தொகுப்பில் உள்ளன. இந்தக் குறிப்பிட்ட யோகத்தில் பிறவாமல், ஆனால் அதே சமயத்தில் நீரில் மூழ்கி மரணமடைந்தவர்களின் ஜாதகங்களும் எம்மிடம் உண்டு. இது செவ்வாய் தோசம் போலத்தான். சிலருக்குப் பலிக்கும். சிலருக்குப் பலிக்காது. ஆனால் நாம் செவ்வாய் தோசத்தை உதாசீனப்படுத்தி எழுதியிருக்கின்றோம். ஏனெனில் ஒரு மண வாழ்க்கை சிறப்பாக அமையாமல் போனால், இன்னொன்றை அமைத்துக் கொள்ளலாம். ஆனால் இது அப்படியல்ல. ஒரு முறை உயிர் போனால் போனதுதான். எனவே மேற்கண்ட யோகத்தில் பிறந்தவர்கள் நீர்நிலைகளை அணுகாமல் இருப்பின் அது அவர்களுக்கு நன்று. எட்டாம் பாவமும், பாவாதிபதியும் மேற்கண்ட யோகத்தோடு எவ்வாறேனும் சம்பந்தப்பட்டிருப்பின், அது இந்த யோகத்துக்குப் பலத்தைச் சேர்க்கும் என்பது எமது முடிவு.
This Week’s Quote:
Everywhere I go I find that a poet has been there before me.
- Sigmund Freud
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
