ஆயிரம் பிறை கண்டவர் என்று, எண்பது வயது கடந்தவர்களைக் குறிப்பிடுவதுண்டு. இன்று நாம் யாருடைய ஜாதகத்தைத் தருகின்றோமோ அவர் ஒன்பது கிரகங்களின் தசைகளையும் கண்டவர். ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரங்களில், முடியும் தருணத்தில் பிறந்தவர்களுக்குப் புதன் தசையில் இருப்பு சில நாட்களே இருக்கும். அவர்கள் சனி தசை ஆரம்பிக்கும் போது (கேது முதல் வியாழன் முடிய 84 வருடங்கள்) 85 வருடங்கள் வாழ்ந்திருப்பார்கள். அதேபோலப் பூசம், அனுச,ம், உத்திரட்டாதி நட்சத்திரங்களின் கடைசி பாகத்தில் பிறந்தவர்களுக்குச் சனி தசையில் இருப்பு சில நாட்களே இருக்கும். அவர்கள் வியாழதசை ஆரம்பிக்கும் போது (புதன் முதல் ராகு முடிய 85 வருடங்கள்) 86 வருடங்கள் வாழ்ந்திருப்பார்கள். இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களைத் தவிர, வேறு நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இப்படி 9 கிரக தசைகளிலும் வாழும் பாக்கியம் கிடைப்பது அரிது.

sample horoscope

sample horosope

 

sample horoscope

sample horosope

புத தசையில் இருப்பு வருடம் 1, மாதம் 1, நாள் 23

இந்த ஜாதகர் எமது தந்தையாரின் நெருக்கமான நண்பர். இவரது ஜாதகத்தைத் தந்திருப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதல் காரணம் இவர் ஒன்பது தசைகளைச் சந்தித்தவர் என்பதற்காக. இரண்டாவது காரணம் இவரது குழந்தைகளைப் பற்றிய தகவல்களைத் தருவதற்காக. இவருக்கு ஆண் குழந்தைகள் இல்லை. பிறந்த குழந்தைகள் மூன்றுமே பெண் குழந்தைகள். முதலில் பிறந்த பெண் இளமையிலேயே கணவரை இழந்துவிட்டார். அவரது பிறப்பு பற்றிய விவரங்கள் நம்மிடம் இல்லை. இரண்டாவது பெண் 10.06.1936ல் பிறந்து, 11.07.1971ல் இறந்துவிட்டார். 23.08.1943ல் பிறந்த மூன்றாவது பெண், தனது 22வது வயதில் பேறுகாலத்தின் போது மரணமடைந்தார். தனது நீண்ட ஆயுட்காலத்தில் இரண்டு பெண்களின் மரணத்தையும் முதல் பெண் கைம்பெண்ணான சோகத்தையும் சந்தித்த இவர் 20.04.1982ல் தனது 86வது வயதில் காலமானார். 

இவரது தீர்க்கமான ஆயுளுக்கும், பிறந்த பெண் குழந்தைகளின் அகால மரணத்துக்கும் காரணங்களை இவரது ஜாதகத்தில் கண்டு கொள்பவர்கள் தங்களது கருத்துக்களையும் பதிவு செய்யலாம்.

நாம் 18.06.17ல் வெளியிட்டிருந்த 'ஐந்தில் வியாழன்' என்ற கட்டுரையைப் படித்த வாசகர் திரு. S. கார்த்திக் காரகக் கிரகமான வியாழன் சொந்த மூலத்திரி கோண வீட்டில் இருப்பதால் காரகோபாவநாஸ்தி என்ற வாக்கின்படி குழந்தைகள் இல்லை என்ற கருத்தைப் பதிவு செய்திருந்தார். இக்காரணத்தைத் தவிர்த்து வேறு காரணங்கள் இருந்தால் சொல்லும்படி நாம் கேட்டுக்கொண்டிருந்தோம். இதற்காக நாம் 'சர்ப்பதோசம்' என்ற கட்டுரையையும் மேற்கோள் காட்டியிருந்தோம். இருந்தும் இக்காரணத்தைப் பதிவு செய்ததற்காகக் கீழ்க்கண்ட ஜாதகத்தை அவரது பார்வைக்குச் சமர்ப்பிக்கின்றோம்.

sample horoscope

2002ல் திருமணமான இவருக்கு முதல் குழந்தை பெண்ணும், இரண்டாவது குழந்தை ஆணுமாக இரண்டு வாரிசுகள் இருக்கின்றன. 

பின்குறிப்பு: ஒன்பது தசைகளைக் கண்டவர் என்ற இந்தக் கட்டுரை ஒன்பது நட்சத்திர தசைகளையும் சந்தித்த நபரைப் பற்றிய கட்டுரை மட்டுமே. நாம் இந்த நட்சத்திர தசைகளைப் பின்பற்றித்தான் பலன் சொல்கின்றோம் என்று யாரும் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே இந்தப் பின்குறிப்பு.

 

This Week’s Quote:

Arise! Awake! and stop not until the goal is reached.

-  Swami Vivekananda

 

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.